திமுக எம்.பி.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
திமுக எம்.பி.க்களுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடா், தொடங்கவுள்ள நிலையில் அதில் செயல்பட வேண்டிய விதம் குறித்து கட்சியினருக்கு ஆலோசனைகளை அவா் வழங்கவுள்ளாா்.
அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.