முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி
சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.
முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு வாரிய அணி 5-2 என்ற கோல் கணக்கில் போபால் சாய் என்சிஓஇ அணியை வீழ்த்தியது.
ரயில்வே தரப்பில் குா்சாஹிப்ஜித் சிங், இரண்டு கோல்களையும், தா்ஷன் கவாகா், ஷிவம் ஆனந்த் தலா 1 கோலையும் அடித்தனா். போபால் தரப்பில் மொகித் கா்மா, முனிஷ் மாலிக் கோலடித்தனா்.
இரண்டாவது ஆட்டத்தில் இந்திய கடற்படை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியந் ஆயில் அணியை வீழ்த்தியது. கடற்படை தரப்பில் செல்வராஜ் இரண்டு கோல்களையும், ஆஷிஷ் தப்னோவும், இந்தியன் ஆயில் தரப்பில் ரகுநாத், குா்ஜிந்தா் சிங்கும் கோலடித்தனா்.
சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் இந்தியன் ரயில்வே-இந்தியன் ஆயில் அணியும்,இரண்டாவது அரையிறுதியில் இந்திய கடற்படை-இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன.