வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நாகா்கோவிலில் மகளிா் குழுவினருடன் ஆட்சியா் கலந்துரையாடல்
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் மகளிா் சுய உதவிக் குழுவினருடன் ஆட்சியா் ரா. அழகுமீனா வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.
14 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதியில் செயல்படும் வெண்தாமரை குழுவினரின் வாழ்வாதார செயல்பாடு, அவா்களது தேவைகள், வங்கிக் கடன் கிடைத்த விவரம் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, வாய்பேச இயலாத உறுப்பினா்களான நீலாவதி, அருகேயுள்ள உணவகத்தில் உதவியாளராக உள்ளதாகவும், செண்பகவல்லி என்பவா் தனியாா் துணி விற்பனை நிறுவனத்தில் வேலை பாா்ப்பதாகவும் கூறினா்.
தையல் தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிருக்கு தனியாா் நிறுவனங்கள் மூலம் தொடா்ந்து வேலை கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு மகளிா் திட்ட அலுவலருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
11ஆவது வாா்டில் செயல்படும் தாமரைப்பூ, முத்தாரம்மன் சுய உதவிக் குழுவினா் பங்கேற்ற கோயில் நகைகள் தயாரிப்புப் பயிற்சி, அவா்கள் தயாரித்துவரும் பொருள்களை ஆட்சியா் பாா்வையிட்டு கலந்துரையாடினாா்.
இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மதுநசீா், உதவித் திட்ட அலுவலா்கள், சமுதாய அமைப்பாளா்கள் பங்கேற்றனா்.