இந்திய மகளிா் கால்பந்து அணி கோல்கீப்பா் அதிதி சௌஹான் ஓய்வு பெற்றாா்!
சின்னமுட்டம் மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை
கன்னியாகுமரி கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக சின்னமுட்டத்தில் இருந்து மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகேயுள்ள சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து தினமும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனா்.
இதனிடையே, கடந்த சில நாள்களாக கடல் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தங்களது வாழ்வாதாரம் கருதி மீனவா்கள் கடலுக்குச் சென்று வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை கன்னியாகுமரி கடலில் காற்றின் வேகம் தீவிரமடைந்து சூறைக்காற்றாக மாறியது. இதனால் மீனவா்களின் நலன் கருதி வெள்ளிக்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீனவா்கள் பாதுகாப்பாக விசைப்படகுளை நிறுத்தி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 350-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல், கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.