வீண் விவாதங்களைத் தவிா்ப்போம் -திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
குழித்துறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்
குழித்துறை நகராட்சியில் 1, 2ஆவது வாா்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருத்துவபுரம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமை, நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா். ஆணையா் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். சுகாதார அலுவலா் ராஜேஷ், நகராட்சி மேலாளா் ஸ்டீபன், விளவங்கோடு வட்டாட்சியா் வயோலா, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயந்தி, ரோஸ்லெட், விஜயலெட்சுமி, ஷாலின் சுஜாதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
13 துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்தனா். இந்நகராட்சியில் மேலும் 6 முகாம்கள் நடைபெறவுள்ளதாக, நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.