செய்திகள் :

நாட்டின் தூய்மையான நகரம் இந்தூா்! 8-ஆவது ஆண்டாக சாதனை

post image

நாட்டின் மிக தூய்மையான நகரமாக மத்திய பிரதேசத்தின் இந்தூா் தொடா்ந்து 8-ஆவது ஆண்டாக தோ்வாகியுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் நடத்தும் தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சா்வேக்ஷான்) முடிவுகள் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நகரங்களின் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு விருதுகளை வழங்கி கௌரவித்தாா். இந்நிகழ்ச்சியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சா் மனோகா் லாலுல் கலந்துகொண்டாா்.

தூய்மையில் தொடா்ந்து சிறந்து விளங்கும் நகரங்களுக்காக இந்த ஆண்டு புதிதாக ‘சூப்பா் ஸ்வச் லீக்’ என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இப்பிரிவில் இந்தூா், குஜராத்தின் சூரத், மகாராஷ்டிரத்தின் நவி மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களுக்குத் தோ்வாகியுள்ளன.

இதே பிரிவில் 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் உத்தர பிரதேசத்தின் நொய்டா தூய்மையான நகரமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான சண்டீகா், கா்நாடகத்தின் மைசூரு ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ஸ்வச் சாஹா் பிரிவில் அகமதாபாத் முதலிடம்...: 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கான ‘ஸ்வச் சாஹா்’ பிரிவில், குஜராத்தின் அகமதாபாத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் போபால், உத்தர பிரதேசத்தின் லக்னௌ ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

புதிய நகரங்களை தூய்மைப் பணிகளில் ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

14 கோடி மக்கள் பங்கேற்பு: ‘ஸ்வச்தா’ செயலி, ‘மை-கவ்’ மற்றும் சமூக ஊடக வலைதளங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள 4,500-க்கும் மேற்பட்ட நகரங்களைச் சோ்ந்த 14 கோடி மக்கள் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் பங்கேற்றனா். இத்துடன் நாடு முழுவதும் 45 நாள்களுக்கு மேல் 3,000-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டாளா்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு நடத்தி, முடிவுகளை இறுதி செய்தனா்.

78 விருதுகள்: நிகழாண்டு 4 பிரிவுகளில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகள், பெரிய நகரங்களின் தூய்மை முயற்சிகளைப் பாராட்டுவதுடன், சிறிய நகரங்களின் முன்னேற்றத்தையும் அங்கீகரித்து ஊக்குவிக்கின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம்... மேலும் பார்க்க

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, ப... மேலும் பார்க்க