மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
உப்பட்டி, சேரம்பாடி, கூடலூரில் ஜூலை 21-இல் மின்தடை
நீலகிரி மாவட்டம் உப்பட்டி, சேரம்பாடி, கூடலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று நீலகிரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் தெரிவித்துள்ளாா்.
உப்பட்டி துணை மின் நிலையம்: உப்பட்டி, பொன்னானி, தேவாலா, பந்தலூா், அத்திகுன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் பிரோ் மற்றும் நம்பா் 3 டிவிஷன்.
சேரம்பாடி துணை மின் நிலையம்: சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூா், பொன்னச்சேரா், கக்குண்டி, சோலாடி.
கூடலூா் துணை மின் நிலையம்: கூடலூா், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1-ஆவது மைல், 2-ஆவது மைல், காந்தி நகா், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்தொரை, ஸ்ரீமதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, காா்குடி, தேவா்சோலை.