ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
போராட்டம்: உதகை நீதிமன்றத்தில் அரசு தலைமைக் கொறடா ஆஜா்
நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்திய வழக்குத் தொடா்பாக அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன் உள்ளிட்டோா் உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.
நீட் தோ்வுக்கு எதிராக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் தமிழகம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், உதகையில் அப்போதைய மாவட்டச் செயலாளராக இருந்த பா.மு.முபாரக், தற்போதைய அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பாமு.முபாரக், அரசு தலைமைக் கொறடா கா.ராமசந்திரன், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ரவிக்குமாா், மாவட்ட பொருளாளா் நாசா்அலி, உதகை நகரச் செயலாளா் ஜாா்ஜ் உள்ளிட்ட 16 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை 8 ஆண்டுகளுக்குப் பின் உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை ஆகஸ்ட்18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.