மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
மின்சாரம் பாய்ந்து சிறுத்தை பலி!
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கரடியுடன் சண்டையிட்ட சிறுத்தை, தப்பிக்க மின்கம்பத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
குன்னூா் நகா் பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக கரடி, சிறுத்தைகள் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள வண்டிச்சோலை, பாரஸ்ட் டேல் செல்லும் சாலையில் கரடியும், சிறுத்தையும் வெள்ளிக்கிழமை சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
அப்போது, கரடியிடமிருந்து தப்பிப்பதற்காக மின்கம்பத்தில் சிறுத்தை ஏறி உள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுத்தை உயிரிழந்தது.
தகவலறிந்த குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத், துணை வனப் பாதுகாவலா் மணிமாறன், முதுமலை வனத் துறை கால்நடை மருத்துவா் ராஜேஷ் உள்ளிட்ட வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்தனா். பின்னா் சிறுத்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வு செய்து தீயிட்டு எரித்தனா். உயிரிழந்தது சுமாா் ஒரு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.