மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
காங்கயம் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து
காங்கயம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டு, வழக்கம்போல மின்விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் கோட்ட செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக, மேற்கண்ட துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அலுவலக காரணங்களால் பராமரிப்புப் பணிகள் ரத்து செய்யப்படுகிறது. எனவே, மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்னோட்டம் செல்லும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.