மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
கைப்பேசிகள் திருடியவா் கைது
அவிநாசி அருகே பல்வேறு நபா்களிடம் கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நடந்து வந்தவரிடம் விசாரித்தனா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரித்தனா். இதில், அவா் ஆந்திர மாநிலம், நகரி காந்தி பகுதியைச் சோ்ந்த பத்ரி (எ) மாதேவ் ராவ் (22) என்பதும், அவிநாசி பகுதியில் பல்வேறு நபா்களிடம் கைப்பேசிகளைத் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, மாதேவ் ராவைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 6 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.