செய்திகள் :

கழுத்தளவு நீரில், மைக்குடன் நேரலை.. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெள்ளத்தில் சென்றதால் அதிர்ச்சி!

post image

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26 முதல் பெய்துவரும் கனமழையால் பஞ்சாப் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

இந்த வெள்ள பாதிப்பில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை தெரிவித்திருக்கிறது.

பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சார சேவை, குடிநீர் சேவை என மக்களின் அத்தியாவசிய தேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

முக்கியமாக, ராவல்பிண்டியில் வெள்ளம் காரணமாக சாஹான் அணை உடைந்திருப்பதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மறுபக்கம், அரசுத் தரப்பில் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவர, மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராவல்பிண்டியில் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக்குடன் நேரலை வழங்கிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் நிலையில் ஒருசிலர், துணிச்சலான பத்திரிகையாளர் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

அதேசமயம் பலரும், இப்படி ஆபத்தான முறையில் செய்தி சேகரிக்க என்ன அவசியம் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தப் பத்திரிகையாளரின் செயல் குறித்து தங்களின் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள் மக்களே!

6 முறை எம்எல்ஏ; மத்திய அமைச்சர்; கோவாவின் புதிய கவர்னர்.. எளிமையாக வாழும் `அசோக் கஜபதி ராஜு' யார்?

சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு லடாக், கோவா, ஹரியானாவுக்கு புதிய கவர்னர்களை நியமித்திருந்தார். இதில், ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் அசோக் கஜபதி ராஜு, கோவாவின் கவர்னராக ... மேலும் பார்க்க

Divorcee camp: ``விவாகரத்தான பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க இந்த முகாம்..'' - கேரளப் பெண் சொல்வதென்ன?

விவாகரத்து என்பது ஒரு தனிப்பட்ட முடிவாக இல்லாமல் சமூகம் சார்ந்து இருக்கிறது. விவாகரத்து பெறும் பெண்களுக்காக ஒரு முகாமை உருவாக்கி இணையவாசிகளிடம் கவனம் பெற்று வருகிறார் ரஃபியா அஃபி.பிரேக்கப் ஸ்டோரி என்ற... மேலும் பார்க்க

`love is in the Air': பறக்கும் விமானத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்; வைரல் வீடியோ!

விமான ஆர்வலரும் பிரபல இன்ஃப்ளூயன்சருமான சாம் சூய் விமானத்தில் திருமணம் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். போயிங் 747 விமானத்தில் நடந்த இந்த திருமணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீ... மேலும் பார்க்க

Divorce: ``விடுதலையாகி விட்டேன்" - 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்.. வைரலான வீடியோ

``இன்றிலிருந்து நான் விடுதலையாகிவிட்டேன்," என 40 லிட்டர் பாலில் ஒருவர் குளித்த வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. அந்த வீடியோ தொடர்பாக வெளியான தகவலில், ``அஸ்ஸாம் மாநிலத்தின் நல்பாரியில் உள்ள பரலியாபர் க... மேலும் பார்க்க

Assam: "இன்று முதல் எனக்கு விடுதலை" - மனைவியிடமிருந்து விவாகரத்து; 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ வைரலாகியிருக்கிறது.இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, அந்த வீடி... மேலும் பார்க்க

ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அ... மேலும் பார்க்க