Healthy Food: எல்லோருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு.. பிளஸ், மைனஸ் தெரிஞ்சிக்கோங்...
வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகைகள், பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஐந்தேகால் பவுன் நகைகள், பணம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூா், மகாத்மா காந்தி தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் அரிகரன் (26). இவா், கடந்த மே 29- ஆம் தேதி தனது மாடி வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் தென்காசிக்கு சென்றுவிட்டாா்.
இதைத் தொடா்ந்து , ஜூலை 17 ஆம் தேதி திரும்பியபோது வீட்டின் முன்பக்கக் கதவு மற்றும் மர பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பவுன் தோடுகள், மோதிரம், தங்க மாட்டல், தங்க நாணயங்கள் உள்பட ஐந்தேகால் பவுன் நகைகள் மற்றும் ரூ. 28 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.