செய்திகள் :

`அதிசய மனிதன், புரட்சிக்காரன்..’ - இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்!

post image

'இவர்கள் வித்தியாசமானவர்கள்' (1980) என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக திரைத்துறையில் நுழைந்தவர் வேலு பிரபாகரன். தன் திறன்களை வளர்த்துக்கொண்டு நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன் , ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் போன்ற படங்களை இயக்கி இயக்குநர் உலகில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். இது தவிர, 'பதினாறு, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3, ரெய்டு, வெப்பன், கஜானா' போன்ற படங்களில் நடித்தார்.

இயக்குநர் வேலு பிரபாகரன்
இயக்குநர் வேலு பிரபாகரன்

2009-ல் 'காதல் கதை' என்ற படம் மூலம் மீண்டும் இயக்குநராகி, 2017ல் 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' படத்தையும் எடுத்தார். 68 வயதாகும் வேலுபிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையில் நேற்று அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு வேலு பிரபாகரனுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mrs & Mr: ``நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்" - நடிகை வனிதா விஜயகுமார் சவால்!

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா தயாரித்து, நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் 'Mrs and Mr'. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்து... மேலும் பார்க்க

Coolie: ``மகாசிவராத்திரி நாளில், நான் உண்ணாவிரதம் இருந்தபோது..." - மோனிகா பாடல் குறித்து பூஜா ஹெக்டே

நடிகர் ரஜினி காந்த், அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா எனப் பெரும் திரைப்பட்டாளமே நடித்த கூலி படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி... மேலும் பார்க்க

Vikram 64: 'பிரேம் குமாரிடம் இருந்து இப்படி ஒரு கதையா?' மிரண்ட விக்ரம்; ஆச்சரிய கூட்டணியின் பின்னணி!

'வீரதீர சூரன்' படத்திற்குப் பின் மீண்டும் அதிரடியாய் ரெடியாகி விட்டார் விக்ரம். அவரது 63வது படமாக 'மண்டேலா' மடோன் அஸ்வினின் படம் டேக் ஆஃப் ஆகும் என்று எதிர்பார்க்கையில் இன்ப அதிர்ச்சியாக, 'மெய்யழகன்' ... மேலும் பார்க்க