மதுரையில் ரௌடி வெட்டிக் கொலை! நண்பர் படுகாயம்!
மதுரை : மதுரையில் ஒரு ரௌடியும் அவரது நண்பரும் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் வசிக்கும் கருமலையும் அவருடன் பழகி வந்த பாலமுருகனும் நண்பர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்று கருமலையை வெட்டிக் கொன்றுவிட்டு செல்லத் திட்டமிட்டனர்.
அதன்படி சம்பவ இடத்துக்கு சென்றபோது கருமலையுடன் பாலமுருகனும் இருந்ததால் இருவரையும் வெட்டிவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
அதில் கருமலை உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருமலை கொலை குறித்து காவல் துறை வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மாயமான நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன் விரோதம் காரணமாக கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.