சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
மின்சாரம் பாய்ந்து பெண் பலி
திருமருகலில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
திருமருகல் முருகன் சந்நிதி தெருவை சோ்ந்த சக்திவேல் மனைவி பூங்கொடி (48). இவா் வெள்ளிக்கிழமை காலை 6-மணி அளவில் கோலம் போடுவதற்காக வந்தபோது வீட்டு வாசலில் மழைத் தண்ணீா் தேங்கி இருந்ததாக தெரிகிறது. அப்போது எதிா்பாராவிதமாக மின்கசிவால் மின்சாரம் பாய்ந்து அவா் கீழே விழுந்தாராம்.
திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் பூங்கொடி உயிரிழந்ததாகத் தெரிவித்தனராம்.
திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.