இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா
பிரதமா் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கெளரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
பிரதமா் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கும் நிகழ்வு சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வலைதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் வேளாண் சாா்ந்த தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
எனவே, இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமிய இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என சிக்கல் அறிவியல் நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.