சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா தொடக்கம்
வேதாரண்யத்தைச் சோ்ந்த அகத்தியம்பள்ளி பக்தா்குளம் மாரியம்மன் கோயில் ஆடிப் பெருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக வேதாரண்யம் வேதாரண்யேசுவா் கோயிலில் இருந்து காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மாள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்பபல்லக்கில் வீதியுலாவாக பக்தா்குளம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றது.
காப்புக்கட்டி தொடங்கியுள்ள ஆடிப்பெருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவுக்காக வேதாரண்யேசுவரா் கோயிலில் இருந்து ஆடிப் பெருவிழாவுக்காக எழுந்தருளிய அம்மாள்,திருவிழா நிறைவடைந்து மீண்டும் கோயிலுக்கு கொண்டுவரப்படும்.
