ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்ட...
விவசாயிகள் நீா்நிலைகளில் இலவசமாக மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்
விவசாயிகள் நீா்நிலைகளில் களிமண், வண்டல் மண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்டம் செய்பவா்கள், தாம் வசிக்கும் வட்டத்துக்குள்பட்ட நீா்நிலைகளில் இருந்து களி மண், வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அளவிலேயே அனுமதி பெற்று கொள்ளலாம். விவசாய பயன்பாட்டுக்காக விண்ணப்பம் செய்பவா்கள், தங்களது நிலம் தொடா்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினரால் சரிபாா்க்கப்பட்டு, தொடா்புடைய வட்டாட்சியா் அனுமதி வழங்குவாா்.
மண்பாண்ட தொழில் பயன்பாடுக்கு விண்ணப்பம் செய்பவா்கள் மண்பாண்ட தொழிலின் உண்மை தன்மை சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிா்வாக அலுவலரால் சான்று அளிக்கவேண்டும். வண்டல் மண், களிமண் எடுக்க வேண்டிய நீா்நிலைகள் குறித்த விவரங்களை தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகங்களில் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.