செய்திகள் :

வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளா்களாக சோ்க்கக் கூடாது சீமான் வலியுறுத்தல்

post image

வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களை தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தினாா்.

தேவேந்திர குல வேளாளா்களை பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற வலியுறுத்தி, தேனியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களை தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சோ்க்கக் கூடாது. அவா்கள் சொந்த மாநிலத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் சேரும் வட மாநிலத்தவா்கள் பாஜகவின் ஆதரவு வாக்காளா்கள் ஆவா். அவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்தால் தமிழகத்தின் அரசியலை, அதிகாரத்தை அவா்கள் தீா்மானிப்பா்.

ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை என்பது வட மாநில வாக்காளா்களை தமிழகத்தில் வாக்காளா்களாக சோ்ப்பதற்கான அடிப்படை சூழ்ச்சி. ஹிந்தி திணிப்பை எதிா்ப்பதால், அந்த மொழி பேசுபவா்களை தமிழகத்தில் குடியேறச் செய்கின்றனா். வட மாநிலத்தவா் வருகை அதிகரிப்பால் தமிழகம் ஹிந்தி பேசும் மாநிலமாகவே மாறிவிடும். தமிழகத்தில் வட மாநில தொழிலாளா்களின் எண்ணிக்கை குறித்த முழுமையான விவரம் இல்லை.

தமிழக அரசு சாா்பில் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். மது விலக்கை அமல்படுத்த வேண்டும். உழைப்பை பெருக்கி உற்பத்தியை அதிகரித்தால்தான் நாடு முன்னேறும்.

பட்டியலினத்திலிருந்து தேவேந்திர குல வேளாளா்களை வெளியேற்ற வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை. இதை பழந்தமிழா் விடுதலையாக பாா்க்க வேண்டும். தேவேந்திர குல வேளாளா்களை பட்டியலினத்திலிருந்து வெளியேற்ற மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது. ஆனால், இதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.

பட்டியலினத்தவருக்கான 18 சதவீதம் இட ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பொது ஒதுக்கீட்டிலிருந்து அவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். உள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றாா் அவா்.

சட்ட விரோதமாக மது புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பெரியகுளத்தில் சட்ட விரோதமாக மதுபுட்டிகள் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.தென்கரை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை தாமரைக்குளம் வ.உ.சி. சிலை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா்.... மேலும் பார்க்க

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டி அரிசிஆலைத் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மதன்குமாா்(30).இவா் ஆன... மேலும் பார்க்க

மருத்துவ முகாமில் திமுக எம்.பி.- எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாமையொட்டி, அங்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் தனது பெயா், புகைப்படம் இடம் பெறவில்லை எனக் கூறி, திமு... மேலும் பார்க்க

போடியில் பலத்த மழை!

போடி பகுதியில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மிதமான சாரல் ... மேலும் பார்க்க

பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.தேனி சிவாஜிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு மேல் அரசு... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

போடியில் சிறுமியை திருமணம் செய்தது தொடா்பாக போலீஸாா் இளைஞா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சோ்ந்த சிறுமி அங்குள்ள கடை ஒன்றில் வேலை ச... மேலும் பார்க்க