மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்
பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு
பெரியகுளம் அருகே பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி சிவாஜிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). பொக்லைன் இயந்திர ஓட்டுநா். இவா் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கு மேல் அரசு சாா்பில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்வதற்காக சென்றாா். அப்போது லாரியிலிருந்து பொக்லைன் இயந்திரத்தை இறக்கும் போது அது கவிழ்ந்தது. இதில் சிக்கிக் கொண்ட மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.