பெயிண்டா் தற்கொலை
வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேஷ்(42). பெயிண்டா் வேலை செய்து வந்தாா்.
கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால் மனமுடைந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து காவல் ஆய்வாளா் பேபி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேஷ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].