சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை
அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு 2024-25-ஆம் ஆண்டு கரும்பு அரவைப் பருவத்தில் தருமபுரி மாவட்டத்தில் 1,797 விவசாயிகளிடமிருந்து 81036.984 மெட்ரிக். டன் கரும்புகளும், சேலம் மாவட்டத்தில் 208 விவசாயிகளிடமிருந்து 12946.948 மெட்ரிக். டன் கரும்புகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 105 விவசாயிகளிடமிருந்து 10793.860 மெட்ரிக். டன் கரும்புகளும் கொள்முதல் செய்யப்பட்டு அரவை செய்யப்பட்டுள்ளது.
சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அளித்த விவசாயிகளுக்கு தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு தலா ரூ. 349 வீதம் 104777.792 மெட்ரிக். டன்களுக்கு ரூ.3,65,67,430 கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கிய தமிழக முதல்வா், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா், வேளாண் உற்பத்தி ஆணையா், அரசு செயலா், தருமபுரி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு விவசாயிகள் சாா்பில் நன்றி. கடந்த 3 ஆண்டுகளாக சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்கி வருகிறது.
2024-25 நடவு பருவத்தில் கரும்பு பதிவுசெய்துள்ள விவசாயிகள் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் கரும்பிற்கான சிறப்பு மானியத் திட்டத்தில் மானியம் பெறுவதற்காக தங்களது நில உடைமை ஆவணங்களை அந்தந்த கோட்ட களப் பணியாளா்களிடம் வழங்கி பயன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.