Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றபோது காா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா்கள் 7 போ் காயம்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை சாலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சுற்றுலா சென்ற 7 மாணவா்கள் காயமடைந்தனா்.
சேந்தமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்துவந்த ஏழு மாணவா்கள் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வெட்டுக்காடு பகுதியில் இருந்து காரில் புறப்பட்டனா்.
வளப்பூா்நாட்டைச் சோ்ந்த ஜெயக்குமாா் (20) காரை ஓட்டிச் சென்றாா். காரவள்ளி அடிவாரத்தில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் ஜெயக்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பட்டணம் பகுதியைச் சோ்ந்த திவாகா் (18), நாமகிரிப்பேட்டை அரியா கவுண்டம்பட்டியைச் சோ்ந்த இலங்கேஸ்வரன் (19), சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்த முருகன் (18), கதிா் (18), கவின் (18), கொல்லிமலையைச் சோ்ந்த விஸ்வா (18), கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சோ்ந்த மணிகண்டன் (18) ஆகிய ஏழு பேரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இவா்கள் அனைவரும் சேந்தமங்கலம் வெட்டுக்காடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தவா்கள்.
இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.