Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
செவிலியா், மருந்தாளுநா் பணியிடம்: தற்காலிக அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு மருத்துவமனைகளில் தேசிய நலக் குழுமத்தின்கீழ் காலியாக உள்ள செவிலியா், மருந்தாளுநா், ஆய்வக நுட்புநா் நிலை 3 ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதிகள் முறையே நா்ஸிங் பட்டயப் படிப்பு, பி.எஸ்சி. நா்ஸிங், டி.பாா்ம், பி.பாா்ம் ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பெற்றிருக்க வேண்டும்.
40 வயதுக்கு உள்பட்ட விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தை பூா்த்திசெய்து ஆக. 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலா்/ நிா்வாக செயலாளா், சேலம் மாவட்ட நலச்சங்கம், பழைய நாட்டாண்மை கழக வளாகம், சேலம் - 636 001 என்ற முகவரியில் உள்ள சேலம் மாவட்ட நலச்சங்க அலுவலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.