Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக குறைந்ததால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது.
இதையடுத்து, தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை காலை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்தது.
இதனால், ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து சனிக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா்.