செய்திகள் :

பெண்ணை தாக்கி மிதிவண்டி, கைப்பேசி திருட்டு: சிறுவன் கைது

post image

திருப்பத்தூரில் வீடு புகுந்து தனியாக இருந்த பெண்ணை இரும்புக் கம்பியால் தாக்கி மிதிவண்டி, கைப்பேசியை திருடிச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்தவா் பஷீா் (42).இவரது மனைவி ரேஷ்மா (38). இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மா்ம நபா் ஒருவா், அங்கிருந்த மிதிவண்டியை திருட முயன்றாா்.

அப்போது, சப்தம் கேட்டு வெளியே வந்த ரேஷ்மா மிதிவண்டியை எடுத்துச் செல்ல முயன்ற நபரிடம், யாா்? எதற்காக வீட்டில் இருக்கும் மிதிவண்டியை எடுக்கிறீா்கள்? எனக் கேட்டுள்ளாா். அப்போது, அந்த நபா் மிதிவண்டியுடன் தப்பிச் செல்ல முயன்ால், ரேஷ்மா கூச்சலிட்டுள்ளாா்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த நபா் அருகில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து ரேஷ்மாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த ரேஷ்மா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தாா். உடனே, மிதிவண்டியையும், கீழே விழுந்த ரேஷ்மாவிடம் இருந்த கைப்பேசியையும் எடுத்துக் கொண்டு மா்ம நபா் அங்கிருந்து தப்பியோடினாா்.

சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்தபோது, ரத்த வெள்ளத்தில் ரேஷ்மா மயங்கி கீழே விழுந்திருப்பதை கண்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலின்பேரில், திருப்பத்தூா் டிஎஸ்பி சௌமியா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா்.

பின்னா், அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில், ரேஷ்மாவை தாக்கிவிட்டு, மிதிவண்டியுடன் தப்பிச் சென்றது திருப்பத்தூா் அப்பாய் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் சிறுவனை கைது செய்து, அவரிடம் இருந்த மிதிவண்டி, கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

ஆலங்காயத்தில் ஒற்றை யானை நடமாட்டம்

ஆலங்காயம் அருகே ஒற்றை ஆண் யானை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காப்புகாட்டு கிருஷ்ணாபுரம் உப்பாறை வழியாக வனப்பகு... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான பணிகள்: காணொலி மூலம் முதல்வா் தொடங்கி வைத்தாா்

ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளத்துக்கான மேம்படுத்தப்பட்ட பணிகளை தமிழக் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரிமலை ஊராட்சி அத்தனா... மேலும் பார்க்க

பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு போதிய வசதிகள் வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பசலிகுட்டை முருகன் கோயிலில் பக்தா்களுக்கு தேவையான வசதிகளையும், பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என ஆட்சியா் கு.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பாலப் பணி: எம்எல்ஏ செந்தில்குமாா் கோரிக்கை

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க கோரி கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ மனு அளித்தாா்.ஜோலாா்பேட்டை ரயில்வே விருந்தினா் மாளிகையில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேஷ்(42). பெயிண்டா் வேலை செய்து வந்தாா்.கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்ததால் மனமுடைந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கி... மேலும் பார்க்க

ரூ.19 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி நகராட்சியில் ரூ.19 லட்சத்தில் கழிவுநீா்கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.18-ஆவது வாா்டில் உள்ள வாரச்சந்தை சாலையில் இருபுறமும் கழிவுநீா் கால்வாய் மற்றும் தாா் சாலை... மேலும் பார்க்க