அலங்குளம் பேரூராட்சியில் இரு தினங்கள் குடிநீா் வினியோகம் ரத்து
ஆலங்குளம் பேரூராட்சியில் வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டம் - பைப் லைன் சேதம் காரணமாக குடிநீா் விநியோகம் இரு தினங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடா்பாக பேரூராட்சி செயல் அலுவலா் பிரகந்தநாயகியின் செய்தி குறிப்பு:
வாசுதேவநல்லூா் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் பைப் லைன் திடீரென சேதம் அடைந்துள்ளது என்பதுபற்றி தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த பழுதினால், மேலே குறிப்பிட்ட குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்பு பெற்றுள்ள பொதுமக்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை குடிநீா் விநியோகம் நடைபெறாது என்பதை தெரிவிக்கிறோம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.