'இது மோசமான சாதிய சமூகம்’ - Suba Veerapandian Interview | Kavin murder case | Vi...
நயினாரகரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
கடையநல்லூா் அருகே நயினாரகரம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ், ஊராட்சி துணைத் தலைவா் சொா்ணம்குமாா், மாவட்டக் குழு உறுப்பினா் பூங்கொடி, ஒன்றியக் குழு உறுப்பினா் மாரிச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை முகாமைத் தொடக்கிவைத்தாா். வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியா் சுடலையாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராமநாதன், பத்மா, அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன் முத்தையா வரவேற்றாா்.