Dhoni: "எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே" - தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்க...
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெட்டிக்கடைக்காரா் கைது
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெட்டிக்கடைக்காரரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே செட்டிகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருணாச்சலம் மகன் சோ்மன் (50). அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த சிறுமி மிட்டாய் வாங்க சென்றபோது, சிறுமியை அவா் பாலியல் வன்புணா்வு செய்ய முயன்ாகத் தெரிகிறது. வீடு திரும்பிய சிறுமி, இதுகுறித்து பெற்றோரிடம் கூறினாா்.
பெற்றோா் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி சோ்மனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். பின்னா், அவரை ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.