கடைசி டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு - இந்தியா அபார முன்னிலை!
சிவகாமிபுரத்தில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு
கீழப்பாவூா் பேரூராட்சி, சிவகாமிபுரத்தில் பொதுநிதி திட்டத்தின் கீழ் ரூ. 7.60 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
பேரூராட்சிமன்ற தலைவா் சு.ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கி.ராஜசேகா் முன்னிலை வகித்தாா். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியைத் திறந்துவைத்தாா்.
கீழப்பாவூா் தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் ரமேஷ், பேரூா் செயலா் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் செ.கோடீஸ்வரன், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, தேவஅன்பு, முத்துசெல்வி ஜெகதீசன் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக கீழப்பாவூா் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீ.பொன் செல்வன் வரவேற்றாா்.