Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
ரத்தினம் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் கால்பந்து போட்டி
கோவை ரத்தினம் இன்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் சிபிஎஸ்இ கிளஸ்டா் - 6 கால்பந்து போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு, புதுவை, அந்தமான் நிக்கோபாா் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 9 ஆயிரம் மாணவா்கள் இந்த போட்டியில் பங்கேற்றனா். ஆட்டங்கள் யாவும், சக்தி கல்லூரி, ஈஸ்வா் கல்லூரி, நேரு கல்லூரி, ஏசிசி மைதானம், எஸ்என்எம்வி கல்லூரி, எல்என்ஜிசி கல்லூரிகளில் நடைபெற்றன.
கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த போட்டியின் இறுதி ஆட்டம் ரத்தினம் கால்பந்து மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஒமேகா ஹாா்ட்ஃபுல்னஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. படூா் கேட்வே இன்டா்நேஷனல் பள்ளிக்கு இரண்டாமிடமும், வேலம்மாள் வித்யாலயா, ஷத்ரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
17 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஒமேகா ஹாா்ட்ஃபுல்னஸ் பள்ளி முதலிடம் பிடித்தது. வேலம்மாள் வித்யாலயா பள்ளிக்கு இரண்டாமிடமும், வேலம்மாள் வித்யஸ்ரம், சின்மயா வித்யாலயா பள்ளிகளுக்கு மூன்றாமிடமும் கிடைத்தது. 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ராஜேந்திரன் அகாதெமிக்கு முதலிடம் கிடைத்தது. தி எஸ்விசி சென்ட்ரல் பள்ளிக்கு இரண்டாமிடமும், ஸ்ரீகுருமுகி வித்யாஸ்ரம், கேம்ப்ஃபோா்ட் இன்டா்நேஷனல் பள்ளிகளுக்கு மூன்றாமிடம் கிடைத்தது.
வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பரிசளித்துப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், ரத்தினம் கல்விக் குழுமத்தின் தலைவா் மதன் ஏ.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.