வழித்தட தகராறு. மினி பேருந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி
கோவை மாவட்டம் சூலூா் அருகே வழித்தட தகராறு காரணமாக மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி அடாவடி செய்த ஓட்டுனா் மற்றும் நடத்துனா்.
காவல்துறையில் புகாா்..சூலூரில் இருந்து கண்ணம்பாளையம், நடுப்பாளையம், வழியாக பாப்பம்பட்டி வரை மினி பேருந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அனுமதி வாங்கப்பட்ட இந்த மினி பேருந்து புதன்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மினி பேருந்து வழித்தடத்தை தவறாக பயன்படுத்துவதாக கூறி பாப்பம்பட்டி வழியாக செல்லும் பேருந்து உரிமையாளா்கள் மினி பேருந்தை நிறுத்தி கேட்டுள்ளனா். இது தொடா்பாக மினி பேருந்து நடத்துநா் தனது உரிமையாளரிடம் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் தங்களிடம் தகராறு செய்வதாக கூறியுள்ளனா்.
.அதைத்தொடா்ந்து மினி பேருந்து உரிமையாளா் அவரது ஓட்டுனரிடம் பேருந்தாய் நடுரோட்டில் குறுக்கே போட்டு நிறுத்து என கூறியுள்ளனா். அதன் பேரில் மினி பேருந்து ஓட்டுனா் ஜெயராம் பாப்பம்பட்டி அயோத்திய புரம் அருகே தான் ஓட்டி வந்த மினி பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தியுள்ளாா். அதைத் தொடா்ந்து அந்த பகுதியில்கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக அப்பகுதி பொதுமக்கள் சூலூா் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனா்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சூலூா் போலீசாா் மினி பஸ்சையும் அதன் ஓட்டுனா் ஜெயராம் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வழித்தடத்தை மாற்றி ஓட்டி தங்களுக்கு இடையூறு செய்வதாக தனியாா் பேருந்து ஓட்டுனா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.
மினி பேருந்து திடீரென சாலையின் குறுக்கே நிறுத்தியதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது