Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு
கோவை வெள்ளலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளிப் நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோவை வெள்ளலூா் கிருஷ்ணா அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (36). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். குடும்பத்தினா் வெள்ளலூரில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த ஜூலை 28-ஆம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, மனைவி , குழந்தைகளை அருகே உள்ள தனது மாமியாா் வீட்டில் கொண்டுச் சென்று விட்டுவிட்டு, சென்னைக்கு சென்றாா். இந்நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, ராம்குமாருக்கு அக்கம்பக்கத்தினா் கைப்பேசி மூலமாக தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, ராம்குமாா் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போத்தனூா் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அதில், பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.