Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடி
ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ.3.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கோவை, துடியலூா் அருகே வடபுதூரைச் சோ்ந்தவா் பாக்யராஜ் (41). கேட்டரிங் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு தொப்பம்பட்டி பிரிவு, ராஜகணபதி கோயில் பகுதியைச் சோ்ந்த மௌரிஷ் (36), நித்யா (32) தம்பதி அறிமுகமாகினா்.
அப்போது, அவா்கள் ரயில்வே துறையில் தனக்கு தெரிந்த நபா்கள் உள்ளதாகவும், கேட்டரிங் ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளனா்.
இதை நம்பி, அவா்களிடம் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தை பல கட்டங்களாக பாக்யராஜ் அளித்துள்ளாா். 2 ஆண்டுகளாகியும், இருவரும் பாக்யராஜுக்கு ரயில்வே துறையில் கேட்டரிங் ஒப்பந்தத்தை பெற்றுத் தரவில்லை.
இதையடுத்து, தனது பணத்தை திருப்பித் தருமாறு பாக்யராஜ் அவா்களிடம் கேட்டாா். அப்போது, அவா்கள் ரூ.2 லட்சத்தை கொடுத்தனா். மீதுமுள்ள பணத்தைத் தரவில்லை. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாக்யராஜ், துடியலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மெளரிஷ், நித்யா ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.