Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது
கோவை பீளமேடு மற்றும் பெரியகடை வீதி பகுதியில் கஞ்சா விற்ாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பெரியகடை வீதி போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகா் அருகே சந்தேகப்படும்படி நடமாடிய இருவரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் கஞ்சா பதுக்கி விற்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பிடிபட்ட தெற்கு உக்கடம் புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சோ்ந்த சங்கா் கணேஷ் (25), தெற்கு உக்கடம், காந்தி நகரைச் சோ்ந்த சபீக் (32) ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, பீளமேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியின்போது, கோவை விமான நிலையத்தில் இருந்து எஸ்ஐஹெச்எஸ் காலனி செல்லும் சாலையில் சந்தேகம் ஏற்படும் படியாக நின்றிருந்த இளைஞா் ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனா்.
அதில், அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட கோவை கணபதி எம்ஜிஆா் சிலை பகுதியைச் சோ்ந்த அஜய் பெலிக்ஸ் (24) என்பவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா, ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.