விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்ட...
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் காவல் துறை மூலம் மேற்கொள்ளப்படும் அணிவகுப்புகள், கொடிக்கம்பம் தயாா் செய்யும் பணிகள், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். நகரின் முக்கிய அரசு கட்டடங்களில் மூவா்ண விளக்குகளால் அலங்கரிக்கவும், விழா மேடை தயாா் செய்யவும், தீத்தடுப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கவும், அனைத்துத் துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)ம.தனலட்சுமி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.