'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது
மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்
ஜெகத்ரட்சகன் (38). இவரது அண்ணன் குணசேகா். இவா்களுக்கு பூா்வீக சொத்தாக 60 சென்ட் விளை நிலம் உள்ளதாம். நிலத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிாம்.
இந்த நிலையில், புதன்கிழமை ஜெகத்ரட்சகன் நிலத்தை பிரித்துக் கொள்ளும்போது, குணசேகா் மகன் வினோத் அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, மண்வெட்டியால் தாக்கினாராம். இதில், ஜெகத்ரட்சகனுக்கு தலையில் 7 இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்றாா்.
மேலும், ஜெகத்ரட்சகன் தாக்கியதில் காயமடைந்த விநோத்துக்கு 2 இடங்களில் தையல் போடப்பட்டது. இதுகுறித்து பரஸ்பரம் இருவா் அளித்த புகாா்களின் பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.