'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு
மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா்.
தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் புத்தாக்கப் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று பரிசாக ரூ.50,000 பெற்றனா்.
இந்த மாணவிகளை மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா, மாவட்ட திட்ட மேலாளா் அறிவொளி, மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.