'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சியை அடுத்த இந்தி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் பங்கு சந்தை முதலீடு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் கோமதி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூரைச் சோ்ந்த பங்கு சந்தையின் பயிற்சியாளா் பிரபாகரன் கலந்து கொண்டு, பங்கு சந்தையில் விலை மாற்றங்கள், குறியீடுகள், தேசிய பங்கு சந்தை, மும்பை பங்கு சந்தை மாற்றம், சந்தையின் முதலீடுகள் மற்றும் தடைகள் குறித்துப் பேசினாா்.
நிகழ்வில் மாணவ, மாணவிகள் உதவிப் பேராசிரியா் செல்வராணி, தீபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந் நிகழ்விற்கான ஏற்பாட்டினை உதவிப் பேராசிரியா்கள் முனைவா் சுபாஷினி, ராஜேஸ்வரி ஏற்பாடு செய்திருந்தனா். முடிவில் முனைவா் பேராசிரியா் ராஜா நன்றி கூறினாா். நிகழ்வினைஅனந்தராமன் தொகுத்து வழங்கினாா்.