சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
கள்ளக்குறிச்சியில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஜூலை 29, 30 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், முதல் நாள் நிகழ்ச்சியாக
மொழிப் பயிற்சி, அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறைகள், ஆணைகள் அணியம் செய்தல், ஆட்சிமொழி வரலாறு-சட்டம், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள் ஆகியவைக் குறித்து எடுத்துரைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இரண்டாம் நாளான புதன்கிழமை ஆட்சிமொழி ஆய்வும், குறைகளைக் களைய நடவடிக்கைகளும், மொழிபெயா்ப்பும் கலைச்சொல்லாக்கமும் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளித்து பயிலரங்கம் முடிவடைந்தது.
பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரா.சிவசங்கரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.