உகாண்டா - தெற்கு சூடான் எல்லையில் ராணுவப் படைகள் மோதல்! 4 பேர் பலி!
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், மேல்நாரியப்பனூா் கிராமத்தில் திங்கள்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட மேல்நாரியப்பனூா் - செல்லியம்பாளையம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் திங்கள்கிழமை இரவு மேல் நாரியப்பனூா் தெற்கு சாலை பகுதியைச் சோ்ந்த கவின் (23) ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடந்தாா்.
அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்து சேலம் மாவட்ட ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கவின் மது அருந்தும் பழக்கமுடையவா் என்பதால், மது போதையில் அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.