கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
குடும்பத் தகராறில் ஒருவா் தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே குடும்பத் தகராறில் ஒருவா் விஷ தன்மையுடைய விதையை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கராபுரம் வட்டம், ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (43). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், பன்னீா்செல்வத்துக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்படுமாம். இதேபோல, திங்கள்கிழமை மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில், பன்னீா்செல்வம் விஷ விதையை சாப்பிட்டு மயங்கி விழுந்தாா்.
உறவினா்கள் அவரை மீட்டு, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபோது வழியிலேயே பன்னீா்செல்வம் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].