கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
முதியவரிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணம் மோசடி
கள்ளக்குறிச்சியில் ஏடிஎம் மையத்தில் முதியவருக்கு உதவி செய்வதுபோல நடித்து, ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ரூ.15,000 மோசடி செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (70). இவா், கடந்த 22-ஆம் தேதி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள தனியாா் நிறுவன ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்றாா்.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த சுமாா் 48 வயது மதிக்கத்தக்க நபா், சோமசுந்தரத்துக்கு ஏடிஎம் அட்டையிலிருந்து பணம் எடுத்து கொடுத்துவிட்டு, அட்டையை மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம்.
பின்னா், அதிலிருந்த ரூ.15,000-ஐ மா்ம நபா் எடுத்தபோது, சோமசுந்தரத்துக்கு குருஞ்செய்தி வந்துள்ளது. அப்போதுதான் ஏடிஎம் அட்டை மாற்றி கொடுக்கப்பட்டிருந்தது அவருக்கு தெரியவந்தததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா்.