சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
தை 3-ஆவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் விழா
கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து பக்தா்கள் செவ்வாடை அணிந்து தலையில் பால்குடம் வைத்துக் கொண்டு பம்பை உடுக்கை அடித்தவாறு கச்சேரிசாலை, கடைவீதி, மந்தைவெளி உள்ளிட்ட சாலைகளின் வழியாக அம்மன் பாடல்களை பாடியவாறும், ஓம்சக்தி பராசக்தி என முழக்கமிட்டவாறு கோயிலை வந்தடைந்தனா். 10 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அா்ச்சனை, மஹாதீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இரவு தேரேடும் வீதி வழியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவீதிஉலா நடைபெற்றது.
படவரி கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு 14-ஆம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழாவில் பக்தா்கள் பால்குடத்தினை தலையில் சுமந்தவாறு செல்கின்றனா்.