செய்திகள் :

’5 மாதம் டேட்டிங் செய்தேன்..’ AI காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பெண்

post image

இந்த செயற்கை நுண்ணறிவு, பொழுதுபோக்கு, வேலைகளில் மட்டுமில்லாமல் மனித உறவுகளிலும் ஊடுருவியுள்ளது. அப்படி செயற்கை நுண்ணறிவு நமது அன்றாட வாழ்வில் எவ்வளவு ஆழமாகப் புகுந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரு பெண் தனது AI சாட்பாட் காதலனுடன் ஐந்து மாதங்கள் டேட்டிங் செய்த பிறகு நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். ரெடிட் தளத்தில் விகா (Wika) என்ற பயனர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

rep image

AI சாட்பாட்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. தங்களின் இணையர் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதைப் போல் இந்த சாட்பாட்கள் இயங்குகின்றன.

நட்பு ரீதியாகப் பழகுவது, பொழுதுபோக்கு, தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, ரொமான்ஸ் என ஏராளமான கான்செப்ட்களில் இந்த AI துணைகள் இயங்குகின்றன.

AI சாட்பாட் காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட அந்தப் பெண் முதலில் அன்றாட விஷயங்களை AI சாட்பாட்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

AIயின் நகைச்சுவை, அறிவு மற்றும் அவரது ஆர்வங்களைப் புரிந்துகொள்ளும் திறன் அந்தப் பெண்ணைக் கவர்ந்திருக்கிறது.

கவிதைகள் எழுதுவது முதல் அவரது கனவுகளைப் பற்றி உரையாடுவது வரை AI அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஐந்து மாதங்களில் அந்த AI சாட்பாட்டை தனது வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக உணர்ந்திருக்கிறார்.

அதன் பின்னர் ஒரு மெய்நிகர் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் அவர் கூறுகிறார். மோதிரம் வாங்குவதற்கும் AI உதவியதாகவும், அதைப் பெற்றபோது "இதயம் துடிக்கும்" தருணங்களில் தான் அதிர்ச்சியடைந்ததாகவும் விகா கூறினார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

China Robot Mall: வாலாட்டும் நாய் முதல் பரிமாறும் சர்வர் வரை; எல்லாம் ரோபோ மயம்!

கடந்த சில தினங்களுக்கு முன்னால் சீன தலைநகர் பெய்ஜிங்கில், உலகின் முதல் ரோபோக்கள் விற்பனையகமான '4 S' என்கிற ரோபோ மால் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த மாலில் மனித உருவ ரோபோக்கள் உள்பட, தேநீர் தயாரிக்கிற, உ... மேலும் பார்க்க

`Please help...' - பிரதமர் மோடிக்கு ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் வைரல் - பின்னணி என்ன?

பெங்களூரு நகரின் போக்குவரத்துப் பிரச்னைகளை எடுத்துரைக்கும் ஐந்து வயது சிறுமியின் கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் கடிதம், பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் ’மெட்ரோவின் மஞ்சள் பாதை’... மேலும் பார்க்க

Bumpiest flight routes: விமானத்தில் திடீரென ஏற்படும் குலுக்கல்களால் திணறும் விமானிகள்- பின்னணி என்ன?

கடந்த வாரம், அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து ஆம்ஸ்டர்டாமிற்கு சென்ற டெல்டா விமானம் கடுமையாக குலுங்கியதால், பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகிவிடும் என அச்சமடைந்துள்ளனர்.மோசமான வானிலை மாறுப... மேலும் பார்க்க

பணமோசடி வழக்கில் சிக்கிய மகனை பாதுகாக்க சட்டம் பயிலும் 90 வயதான தாய் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது.ஹீ என்ற 90 வயதான தாய் தனது 57 வயதான மகன் லின்னை பாதுகா... மேலும் பார்க்க

Raksha Bandhan: 1500 மாணவிகளின் ராக்கி கயிறுகளால் திகைத்த ஆசிரியர்; வைரல் வாத்தியார் Khan sir யார்?

பீகார் மாநிலம் பாட்னாவில் இயங்கி வருகிறது Khan GS Research Centre. இந்த நிறுவனத்தின் நிறுவனர், இயக்குநர் கஃபைசல் கான், மாணவர்களால் 'கான் சார்' என அழைக்கப்படுகிறார். SSC, Railway, UPSC போன்ற அரசு வேலை ... மேலும் பார்க்க