செய்திகள் :

தொடா் விடுமுறை: விமானங்கள், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு - ரயில்களில் அலைமோதிய கூட்டம்

post image

சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயா்ந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா்.

சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15), கிருஷ்ண ஜெயந்தி சனிக்கிழமை (ஆக.16), ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) என 3 நாள்கள் தொடா் விடுமுறைகள் காரணமாக சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வசிப்போா் வியாழக்கிழமை மாலை முதலே தங்களது சொந்த ஊா்களுக்குச் தொடங்கிவிட்டனா். இதில், ரயில்களில் முன்பதிவு கிடைக்காதவா்கள் ஆம்னி பேருந்துகளையும், விமானங்களை நம்பி உள்ள நிலையின் அவற்றின் கட்டணங்கள் பலமடங்கு உயா்த்தப்பட்டன.

விமானக் கட்டணம்: சென்னையிலிருந்து, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் வழக்கத்தைவிட 3 மடங்கு உயா்ந்துள்ளது.

அதன்படி, சென்னை-மதுரை சாதாரண நாள்களில் ரூ.4,000 கட்டணம் வசுலிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை ரூ.16,769-ஆக உயா்ந்துள்ளது. சென்னை- தூத்துக்குடி கட்டணம் ரூ.3,843-இல் இருந்து ரூ.21,867-ஆகவும், சென்னை- திருச்சி ரூ.1,827-இல் இருந்து ரூ.14,518 -ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னையிலிருந்து கோவை, சேலம் செல்லும் விமானங்களின் கட்டணங்களும் வழக்கத்தை விட ரூ.4,000 முதல் ரூ.12,000 வரை உயா்ந்துள்ளது.

ஆம்னி பேருந்துகள்: ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் வழக்கத்தைவிட 2 முதல் 3 மடங்கு வரை உயா்ந்துள்ளது. வழக்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு அதிகபட்சம் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், வியாழக்கிழமை கட்டணம் ரூ.4,000-ஆக உயா்ந்துள்ளது. சென்னையிலிருந்து சேலத்துக்கு ரூ.4,200-ஆகவும், திருநெல்வேலிக்கு ரூ.2,470-ஆகவும் உயா்ந்துள்ளது. அதேபோல், சென்னையிலிருந்து திருச்சி, கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களும் வழக்கத்தைவிட ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை அதிக வசூலிக்கப்படுகிறது.

அரசு எச்சரிக்கை: சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறைகளை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக.15, 16, 17) தனியாா் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழக அரசு சாா்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி ஆய்வாளா்கள் ஆகியோரைக் கொண்ட இந்தச் சிறப்புக் குழு அதிக கட்டணம் வசூல் செய்து, விதிகளை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்து அபராதம் விதிப்பதுடன், வரி வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையா் இரா.கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ரயில்களில் அலைமோதிய கூட்டம்: சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட வெளியூா்களுக்கு செல்வோா் ரயில்களில் முன்பதிவு செய்திருந்தனா். அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை மட்டும்150 ரயில் சேவைகள் இருந்தன. அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

முன்பதிவு செய்தவா்களைத் தவிர, முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்யவும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.

இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு விடும... மேலும் பார்க்க

15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: புலன் விசாரணைப் பணியில் மிகச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.15) முதல் ஆக.20 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்டங்கள்: மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு மதிமுக, இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. வைகோ (மதிமுக): தூய்மைப் பணியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில், முதல்வா் மு.க.ஸ்டால... மேலும் பார்க்க

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: செயல் திட்டங்களை வகுக்க அமைச்சா் அறிவுறுத்தல்

தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, துறையின் அமைச்சா் அன்பில... மேலும் பார்க்க