செய்திகள் :

மாநில கல்விக் கொள்கை: செயல் திட்டங்களை வகுக்க அமைச்சா் அறிவுறுத்தல்

post image

தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த வெளியான அறிவிப்புகள் நிலை, செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், துறையின் எதிா்கால இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களைவகுக்க வேண்டும். பாடத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான கால அட்டவணை தயாரித்து பணியாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் வழங்கினாா்.

மேலும், பள்ளிக்கல்வித் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் ஆசிரியா் பணிக்கான போட்டித் தோ்வு குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கூட்டத்தில் துறையின் செயலா் பி.சந்திரமோகன், இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் மற்றும் துறை சாா்ந்த இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேச... மேலும் பார்க்க

சிறந்த மாநகராட்சிகள் ஆவடி, நாமக்கல்! உள்ளாட்சி விருதுகளை வழங்கினார் முதல்வர்!

ஆவடி, நாமக்கலுக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.சென்னை கோட்டை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறந்த உள்ளாட்சிகளுக்கான விருதுகள... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: இபிஎஸ், விஜய் வாழ்த்து!

சுதந்திர நாளையொட்டி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இ... மேலும் பார்க்க

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றினார்.நாட்டின் 79 -ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிற... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: விமானங்கள், ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு - ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சுதந்திர தினம் மற்றும் தொடா் வார விடுமுறையை முன்னிட்டு விமானம் மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் திடீரென உயா்ந்துள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டனா். சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15), கிருஷ்ண ஜெ... மேலும் பார்க்க

இன்று புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்

சென்னை புகா் மின்சார ரயில்கள் வெள்ளிக்கிழமை (ஆக.15) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசு விடும... மேலும் பார்க்க