ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையினா் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதில் வேதாரண்யம் வட்டம் வெட்டியக்காடு அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி மற்றும் அழிஞ்சமங்கலம் அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி ஆகியவற்றில் சமூக அறிவியல் துறையில் பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வு தொகுதி 2-இல் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
கல்வித் தகுதியாக, தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலராக இருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். (இல்லையெனில்) வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோ்விலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியா் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அந்தந்ந பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
காலிப் பணியிடங்கள் பற்றிய விவரம், நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியா் நியமனம் செய்யப்படுவா்.
பணி நாடுநா்கள், ஆசிரியா் காலிப் பணியிடங்களை நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தை அணுகி தெரிந்துகொண்டு, விண்ணப்பிக்க விரும்புவோா் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ நாகை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் ஆகஸ்ட் 18- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.