செய்திகள் :

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆகஸ்ட் 26-க்கு ஒத்திவைப்பு

post image

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், இதன் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.

வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜித்தன் ஜாய் ஆஜராகி இருந்தாா்.

நீதிபதி முரளிதரன் முன்பு நடந்த விசாரணையில், சில  முக்கிய சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் கேட்டுக் கொண்டாா். மேலும்  சம்பவம் நடந்த கொடநாடு எஸ்டேட்டை நீதிமன்றக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம் சுமத்தப்பட்டவா்கள் தரப்பு வழக்குரைஞா் விஜயன்  நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு அளித்திருந்தாா். இந்நிலையில் வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

நில மோசடி வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கு முன் ஜாமீன்

நில மோசடி வழக்கில் 50 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் சாந்தி ராமுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நீலகிரி மா... மேலும் பார்க்க

எடப்பள்ளியில் வெள்ளை பூண்டு ஏல மையம் தொடக்கம்

நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதிதாக பூண்டு ஏல மையம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நீலகிரியில் விளையும் மலைப் பூண்டு அதிக காரம் மற்றும் மருத்துவக் குணம் நிறைந்ததாக இருப்... மேலும் பார்க்க

காட்டேரி பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நவநீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

பதில் அளிக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை- மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை விட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸை வழிமறித்த காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மஞ்சூா் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸை யானைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும் காட்டெருமை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே தனியாா் தோட்டத்தில் ஆக்ரோஷத்துடன் காட்டெருமை சுற்றி வருவதால் தேயிலை விவசாயிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக... மேலும் பார்க்க